முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி இந்திய தூதருடன் சிபிஐ இயக்குனர் சந்திப்பு

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஏப் 20 - சொகுசு ஹெலிகாப்டர்கள் பேர ஊழல் வழக்கு தொடர்பாக இத்தாலிக்கான இந்திய தூதர் பசந்த் குமார் குப்தாவை சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் ரஞ்சித் சின்ஹா கலந்து கொண்டார். அப்போது இந்திய ராணுவத்துக்கு சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பாக இந்திய தூதர் பசந்த் குமாருடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சில நபர்கள் குறித்து இத்தாலி அரசிடம் இந்தியா கேட்ட தகவல்களை விரைவில் பெறுவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. 

இந்திய ராணுவத்துக்கு ரூ. 3,600 கோடி சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய விமான படையின் முன்னாள் தலைவர் எஸ்பி தியாகி உட்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த குற்றச்சாட்டையடுத்து இத்தாலி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்