முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் - அர்ஜுன் மும்பை இண்டியன்ஸுடன் பயிற்சி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், ஏப்.21 - இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அவரது மகன் அர்ஜுனும் அவருடன் இருந்தார். 

கடந்த ஆண்டு வரை மும்பை இண்டியன்ஸ் அணியில் சச்சின் இடம் பெற்றிருந்தார். சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு சச்சின் விளையாடவில்லை. 

இந்நிலையில் துபையில் உள்ள ஐசிசி அகாதெமி மைதானத்துக்கு சனிக்கிழமை வந்த சச்சின், அங்கு பயிற்சி மேற்கொண்டிருந்த மும்பை இண்டியன்ஸ் அணி வீரர்களுக்கு பந்து வீசினார். 

இந்திய அணியிலும், மும்பை இண்டியன்ஸ் அணியிலும் சச்சின் 10 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். சச்சின் ஓய்வு பெற்றதை அடுத்து அவர் அணிந்து விளையாடிய 10-வது என் ஜெர்ஸிக்கும் மும்பை இண்டியன்ஸ் அணி ஓய்வு கொடுத்துவிட்டது. அந்த எண் கொண்ட ஜெர்ஸி வேறு எந்த வீரருக்கும் வழங்கப்படவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago