முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில் பங்காற்றிய பொறியாளர் மறைவு

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப்.22 - நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க பொறியாளர் ஜான் சி ஹூபோல்ட் தனது 95-வது வயதில் காலமானார்.

இதுகுறித்து அமெரிக்காவின் மிண்வெளி ஆய்வு நிறுவனம் நாஸா வெளியிட்டுள்ள அறிக்கையில் விண்வெளித் துறையில் ரஷியாவுடன் கடும் போட்டி நிலவி வந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான அமெருக்காவின் திட்டத்தை நிறைவெற்றுவதில் ஹூபோல்ட் முக்கிய பங்காற்றினார். பூமியிலிருந்தே நேரடியாக மிகப்பெரிய ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பதிலாக, நிலவில் சுற்று வட்டப் பாதையிலிருந்து சிரிய ஓடம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதே சிறந்ததாக இருக்கும் என அவர் வாதாடி, அதற்கான ஒப்புதலை ஜான் கென்னடியிடமிருந்து பெற்றார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாஸாவிலிருந்து 1976-ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்ற ஹூபோல்ட் அதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் விண்வெளித்துறை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்