முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் விமான அடியில் பயணித்த சிறுவன்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப்.23 - அமெரிக்காவில் விமான சக்கரத்தின் அடியில் ஒரு சிறுவன் 51/2 மணி நேகம் பயணம் செய்தான்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஹவாய் தீவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அது ஹவாய் தீவில் உள்ள மாஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானத்தின் பின்புறம் சக்கரத்தின் அருகே கருப்பின சிறுவன் ஒருவன் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு அதிகாரிகல் கண்டுபிடித்தனர். உடனே அவனை பிடிக்க முயன்றனர். ஆனால் அவனை காணவில்லை. திடீரென மாயமாகி விட்டான்.

எனவே அவனை விமான நிலையத்தில் தெடிநார்கள். இதற்கிடையே சிறிது நேரம் களித்து அந்த சிறுவன் விமான நிலையத்தின் ஓடுகளத்தில் சுற்றி திரிந்தான். பின்னர் அவன் மயங்கி விழுந்தான். தகவல் அறிந்ததும் அவனை விமான நிலைய ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்த அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவன் பெற்றோருடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு விமான நிலையம் வந்திருக்கிறான்.  அங்கு நின்ற விமானத்தின் சக்கரத்திற்கு இடையே சுமார் 51/2 மணி நேரம் பதுங்கி இருந்து 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது தெரியவந்தது. ஆனால் இதை ஒரு பெரிய சாகசமாக  விமான அதிகாரிகள் கருதுகின்றனர். ஏனெனில் விமான சக்கரத்தின் அடியில் ஆக்சிஜன் மிக குறைவாக இருக்கும். ரத்தத்தை உறைய வைக்கும் மைனஸ் டிகிரிக்கு குளிர் ஏர்படும்.

அந்த கடும் குளிரில் 51/2 மணி நேரம் பயணம் செய்த அவன் உயிருடன் இருப்பதே அதிசயம் என தெரிவித்தனர். விமான சக்கரத்துக்கு இடையே சிறுவன் பதுங்கியது விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைவாடே காரணம் என்று குற்றசாட்டும் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்