முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை ருசித்தது சென்னை

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

அபுதாபி, ஏப்.23 - சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 

முதலில் ஆடிய சென்னை அணி 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த சென்னை அணிக்கு ஸ்மித் மற்றும் மெக்கல்லம் அதிரடி துவக்கத்தைத் தர முற்பட்டனர். ஆனால் மெக்கல்லம் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உனத்காட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரெய்னா, ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட ஆரம்பித்தார். டெல்லி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் பவுண்டரிகள் கட்டுப்படுத்தப்பட்டன. 28 பந்துகளில் 29 ரன்கள் அடித்த ஸ்மித் நதீம் பந்தில் வீழ்ந்தார். 

மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரெய்னா, 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். 56 ரன்களுக்கு அவர் ஆட்டமிழக்க, ப்ளெஸ்ஸி , தோனியுடன் இணைந்தார். இந்த இணையால் சென்னை 150 ரன்களைக் கடந்தது. ப்ளெஸ்ஸி 17 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கும், டோனி 15 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்தது. அதிகபட்சமாக ரெய்னா 56 ரன்கள் எடுத்தார். 

 தனது ஆட்டத்தை தொடங்கிய டெல்லி அணி 2-வது ஓவரில் துவக்க வீரர் பாண்டேவை 2 ரன்களுக்கு இழந்தது. தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் விஜய்யும் அடுத்த ஓவரில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாண்டே திவாரியை வெளியேற்ற, டெல்லி அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டுமினியும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்மித்தின் பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆட்டம் மொத்தமாக சென்னை அணிக்குச் சாதகமாகத் திரும்பியது. நட்சத்திர வீரர் கார்த்திக்கும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

டெல்லி அணியின் வீரர் கோல்டர் நீல் பேட்டிங் செய்ய இயலாலததால் 84 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் டெல்லி அணியின் ஆட்டம் நிறைவடைந்தது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் பந்துவீசிய அனைத்து வீரர்களும் விக்கெட் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணிக்கு அதிகபட்சமாக நீஷம் 22 ரன்கள் குவித்திருந்தார். 

இந்த வெற்றியால் சென்னை சூப்பர் கீஙஸ் பேப்டன் டோனி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த போட்டி குறித்து அவர் கூறியதாவது: வீரர்களின் ஓட்டு மொத்த செயல்பாடு சிறப்பாக இருந்தது. நாங்கள் பிடித்த சில அபாரமான கேட்சுகள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. ஆட்டம் முழுவதையும் எங்கள் வசம் படுத்தி கொண்டோம். எங்களது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. 20 ஓவர் போட்டிக்கு 7 பேட்ஸ்மேன்கள் என்பது போதுமானதே. இவ்வாறு அவர் கூறினார். என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago