முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபா ராம்தேவ் உறுதி தளர்கிறது

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.4 - ஊழல் மற்றும் கறுப்புப்பணம் தொடர்பாக உள்ள பிரச்சினைகளில் ஒருசிலவற்றை தவிர மற்ற பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இதனையொட்டி அவரது சாகும்வரை உண்ணாவிரத போராட்ட திட்டத்தில் உறுதி தளருவது போல் உள்ளது. 

நாட்டில் ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதத்தை இன்று முதல் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தொடங்கப்போவதாக ராம்தேவ் அறிவித்திருந்தார். இந்த உண்ணாவிரதத்தை நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர்களின் வேண்டுகோளின்படி மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி உள்பட மூத்த அமைச்சர்கள் ராம்தேவுடன் சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரகசியமாக நடத்தியாக தெரிகிறது. இதனையொட்டி நேற்று அவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் ஊழல்,கறுப்பு பணத்தை ஒழித்தல் தொடர்பான பிரச்சினைகளில் ஒருசிலவற்றைத்தவிர மற்றவைகளில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது என்றார். 

என்னுடைய போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக நல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதற்காக என்னுடைய போராட்டமானது அரசியல் ரீதியாகவோ வகுப்புவாத ரீதியாகவோ இல்லை. ஒரு சில பிரச்சினைகளை தவிர மற்ற பிரச்சினைகளில் எங்களுக்கும் மத்திய அரசுக்கும் கருத்தொற்றுமை ஏற்படும் சூழ்நிலை  உள்ளது. ராம்தேவை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பலதடவை சந்தித்து சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony