முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சட்டசபை கூட்டம் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.4 - தமிழக சட்டசபை கூட்டம் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக சபாநாயகர் டி.ஜெயக்குமார் கூறினார்.தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. கூட்டம் முடிந்த பின்னர் சபாநாயகர் டி.ஜெயக்குமார் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, துணைச் சபாநாயகர் பி.தனபால், அரசு கொறடா பி.மோகன், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், தி.மு.க. எம்.எல்.ஏ. துரைமுருகன், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆறுமுகம், செளந்தரராஜன், பா.ம.க. சார்பில் ஜெ.குரு, புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி, பார்வர்டு பிளாக் கதிரவன், மனித நேய மக்கள் தலைவர் ஜவரூல்லா உட்பட 17 பேர் கலந்த கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் சபாநாயகர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அலுவல் ஆய்வுக் கூட்டம் முடிவின் படி சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 6-ம் தேதி மறைந்த உறுப்பினர்கள் அ.பாலுச்சாமி, தா.வேடியப்பன், வி.கே.இராஜூ, கே.பார்த்தசாரதி, சீ.நல்லுசாமி, மு.ரா.செளந்திரராஜன், மு.சின்னக்குழந்தை ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். பின்னர் மறைந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்.மரியம்பிச்சை மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். பின்னர் சபை ஒத்தி வைக்கப்படும். 7,8,9, 10 ஆகிய நாட்களில் ஆளுநர் உரையின் தீர்மானத்தின் மீது நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். 10-ம் தேதி அன்று ஆளுநர் உரைக்கு பதிலுரை அளிக்கப்படும் மற்றும் அரசினர் அலுவலகள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்