முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் ஆஸ்பத்திரியில் 3 அமெரிக்க டாக்டர்கள் சுட்டுக் கொலை

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், ஏப்.26 - ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டினர் சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய முன்தினமும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காப்பூலில் அமெரிக்க அறக்கட்டலை சார்பில் சர்வதேச ஆஸ்பத்திரி நடத்தப்பட்டு வருகிறது.

அங்கு ஏராளமானோர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றய முன் தினம் அங்கு ஒரு மர்ம நபர் புகுந்தான். அவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை தாக்கினான். இந்த தாக்குதலில் 3 டாக்டர்கள் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியாகினர். இவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். மேலும் நர்சு ஒருவருக்கும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்தனர். அப்போது துப்பாக்கியால் சுட்டநபர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடினார்.

விரட்டி சென்ற போலீசார் அவன் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவன் காயத்துடன் சுருண்டு விழுந்தான். எனவே அவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவன் போலீஸ் காரண் என தெரியவந்தது. துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் தெரியிவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்