முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத சோதனை: அமெரிக்கா - இந்தியா மீது வழக்கு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப்.26 - அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மார்ஷல் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. இது பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இங்கு கடந்த 1946 மற்றும் 1958-ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா அணுகுண்டு சோதனைகள் நடத்தியுள்ளது.

67 தடவை இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுப் புற சூழலும், மக்களின் உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. கதிர் வீச்சு பாதிப்பு இன்னும் இருந்து வருகிறது. அணு ஆயுதம் குறித்து சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என அமெரிக்கா மீது மார்ஷல் தீவுகள் நார்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ரஷிய, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இஸ்ரேல் மற்றும் வட கொரியா உள்ளிட்ட 9 நாடுகள் மீது நேதர்லாந்து தலைநகர் ஹகூவில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் 1968-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சர்வதேச அணு ஆயுத சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்