முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தை 50 நாளாக தேடுகிறார்கள்: முன்னேற்றம் இல்லை

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பெர்த், ஏப்.27 - நடுவானில் மாயமான எம்.எச். 370 மலேசிய விமானத்தை தேடும் பணி இன்றுடன் 50-வது நாளாக எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் தொடர்கிறது. 

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என்ற யூகத்துடன் ஆஸ்திரேலிய கடற்படையுடன் அமெரிக்க கடற்படை விமானம் ஒன்றும் தேடலில் ஈடுப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேடல் இன்றுடன் 50-வது நாளாக எந்த முன்னேற்றமும் இன்றி தொடர்ந்து வருகிறது. 

ஆஸ்திரேலிய கடற்படையின் கூட்டு நிறுவனமான ஜே.ஏ.சி.சி. தளபதி ஆங்கஸ் ஹவ்ஸ்டன் தலைமையில், தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. 

உடைந்த பாகங்கள் போன்ற சில உதிரிப் பாகங்கள் தெற்கு இந்திய கடலில் காணப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் தேடல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கறுப்புப் பெட்டியின் சிக்னல்கள் சில இடைவேளைகளில் அதே இடத்தில் பதிவானதை அடுத்து அங்கு அமெரிக்காவின் சோனார், இங்கிலாந்தின் பிளு பின் - 24 போன்ற கருவிகள் சிக்னலை பதிவு செய்து, பின்னர் அந்த பகுதிக்கு தேடல் வட்டம் சுறுக்கிகொள்ளப்பட்டது. 

விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில்,அமெரிக்க கணித வல்லுனர்களும் ஈடுபட்டுனர். தேடலில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் மிகவும் நம்பிக்கைக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை கப்பல் கேடயம் இரண்டு மணி நேரத்தில் இரண்டுக்கும் அதிகமான சிக்னல்களை கண்டறிந்துள்ளது. கடல் பரப்பிலிருந்து சரியாக 4,500 மீட்டர் கீழே இந்த சிக்னல் கருவியில் பதிவானது. 

இருப்பினும் கறுப்புப் பெட்டியின் சிக்னலை ப்ளுபின் - 21 என்ற கருவியால் நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் கறுப்புப் பெட்டியிலிருந்து வெளியான சிக்னல்கள் திடீரென நின்றது. கருப்புப் பெட்டியின் பேட்டரி ஒரு மாததிற்கு மட்டும் செயல்படும் பின்னர் அது காலாவதி ஆக விடும் என்ற நிலையில், சிக்னல் பதிவு நின்ற நிகழ்வு பெறும் பின்னடைவாக கருதப்பட்டது. 

இதனை அடுத்து, ஆஸ்திரேலியாவின் பிரதமர் டோனி அபாட், "காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது என்பதை கண்டறியும் பணியை எமது நாடு கைவிடப் போவதில்லை. 

எம்.எச்-370 விமானத்திற்குள்ளே என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியுமா என்பதில் நாங்கள் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளோம்" என்றார். 

தேடலில் மேற்கொள்ளப்பட்ட தொடக்கம் முதல் தற்சமயம் வரை தெற்கு இந்திய பெருங்கடலில் அடிக்கடி நிகழ்ந்த வானிலை மாற்றம், புயல் சின்னம் போன்ற காரணத்தால் எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடும் பணி பல முறை நிறுத்தப்பட்டது. கறுப்புப் பெட்டி இருப்பதாக கணிக்கப்பட்ட கடற்பரப்பின் தரைப்பரப்பிற்கு ஆளில்லா நீர்மூழ்கி அனுப்பப்பட்டது, முதன் முறை பாதையிலிருந்து விலகி பாதி வழியில் கடல்மட்டத்திற்கு வந்த அந்த இயந்திரம், மீண்டும் திட்டமிடப்பட்டு தரைப்பரப்பிற்கு அனுப்பப்பட்டது. 

இந்த ஆளில்லா நீர்மூழ்கி 7 முறை ஆழ்கடலுக்குள் சென்றும் தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில், டைட்டானிக் கப்பலின் பாகங்களை தேட பயன்படுத்தப்பட்ட அதிநவீன உத்திகளை இந்த தேடலுக்கு பயன்படுத்த ஆஸ்திரேலிய கடற்படை நிறுவனம் திட்டமிட்டுவருகிறது. 

இந்த நிலையில் இந்திய பெருங்கடலின் 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய தேடுல் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதில் 8 நாடுளின் 10 கப்பல்கள், 8 விமானங்கள், 49 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் இடைவேளைகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேடல் இன்றுடன் 50- வது நாளாக எந்த ஒரு உறுதியான தகவலும் இன்றி நீடிக்கிறது. 

புளுபின்21-நீர்மூழ்கி மூலம் ஆழ்கடலிலும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. விமான தேடுதல் குறித்து மலேசிய அரசு இதுவரை எந்த தகவலையும் வெளியிட வில்லை. இதனால் எம்எச் 370 விமான பயணிகளின் உறவினர்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து மலேசிய பிரதமர் நிஜாப் ராசாக் விமானம் காணாமல் போனதற்கான காரணம் அதை தேடும் பணி கூறித்த நிலவரம் குறித்து அடுத்தவாரம் அறிக்கை வெளியிடப்படும் என கூறி உள்ளார். 

இது குறித்து அவர், ‘’மலேசிய அரசு மற்றும் ஐ நா சர்வதேச விசாரணைக்குழு நிபுணர்கள் தயாரித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. சர்வதேச விசாரணைக்குழு தாங்கள் சேகரித்த தகவல்களை அடுத்த வாரம் பொதுமக்களுக்கு வெளியிடுவார்கள்’’ என்றார். விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டதை அடுத்து மலேசிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்