முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 18-க்குள் மன்மோகனிடம் சம்மன் வழங்க உத்தரவு

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப்.27 - மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும் ஜூன் 18-ஆம் தேதிக்குள் அவரிடம்  சம்மனை வழங்குமாறு, வழக்கு தொடர்ந்து சீக்கிய உரிமைக் குழுவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவறும்பட்சத்தில், அவருக்கு எதிரான இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. 1990களில் பஞ்சாப் மாநிலத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் துன்புறுத்தப்பட்டு, பாதுகாப்பு வீரர்களால் சட்டத்துக்கு புறம்பான வகையில் கொல்லப்பட்டதற்கு நிதியாதாரம் அளித்ததாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கைச் சேர்ந்த நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கடந்த ஆண்டு மன்மோகன் சிங்குக்கு எதிராக வாஷிங்டன் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்தது. மன்மோகன் சிங்கிற்கு அந்த சம்மனை அனுப்பியதற்கான ஆதாரத்தை ஜூன் 18-ஆம் தேதியோ, அதற்கு முன்பாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி ஜேம்ஸ் இ போஸ் பெர்க் ஏப்ரல் 18-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் மன்மோகன் சிங்கிற்கு எதிரான சம்மனை அவரிடம் சமர்ப்பிக்க, அமெரிக்க சட்டப்படி மின்னஞ்சல், பொது அறிவிப்பு மற்றும் இதர மாற்று வழிகளை பயன்படுத்த உள்ளதாக அந்த சீக்கிய அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கான போர்க்குற்றதில் ஈடுபட்டதாக அந்நாட்டு அதிபர் ராஜ்பட்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிரான சம்மனை பொது அறிவிப்பு மூலம் வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்