முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழை பயன்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 4 - நீதிமன்றங்களில் தமிழை பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சட்டசபையில் கவர்னர் நிகழ்த்திய உரையில்,

தமிழ்மொழியின் தொன்மையையும், பெருமையையும் மற்ற மொழியினரும் உணர்ந்து போற்றத்தக்க வகையில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் புகழ்பெற்ற தமிழ் நூல்களை ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிகம் பேசப்படும் ஏனைய மொழிகளிலும், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு இணைய தளத்தில் இடம் பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும். கணினி வழித் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் தனித் தன்மை இழந்த தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களை மீட்டெடுக்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக ஆக்கவும், நீதிமன்றங்களில் தமிழைப் பயன்படுத்தவும் மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்