முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஜூன் 4 -  காஷ்மீர் மாநிலத்தில் சோப்பூர்  நகரில் நடந்த ஒரு துப்பாக்கிச்சண்டையின் போது 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.காஷ்மீர் மாநிலத்தின்  வடக்கு பகுதியில் உள்ள சோப்பூர் என்ற நகரத்தில் சீர் என்ற இடத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கி  இருப்பதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்நகரில் உள்ள சட்டக்கல்லூரி அருகே  கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டில்  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து ராணுவத்தினரும் போலீசாரும் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் சுட்டனர்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர் என்று ஸ்ரீநகரில் உள்ள ராணுவ  செய்தி தொடர்பாளர் பிரார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony