முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான தோல்வியை மறக்க விரும்புகிறோம்: கோலி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

அபுதாபி, ஏப் 28 - ஐபிஎல் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 14வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ராஜஸ்தானின் அபாரமான பந்து வீச்சில் திணறியது. அந்த அணி 70ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 21 ரன் எடுத்தார். 3 வீரர்கள் டக்அவுட் ஆனார்கள். 

ராஜஸ்தான் வீரர் தாம்பே 4 விக்கெட் வீழ்த்தினார். பெங்களூர் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு கொல்கத்தாவுக்கு எதிராக 82 ரன்னில் ஆல் அவுட்டாகி இருந்தது. 

71 ரன் இலக்கை ராஜஸ்தான் அணி 13 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து எடுத்து வெற்றி பெற்றது. இந்த மோசமான தோல்வியால் பெங்களூர் கேப்டன் விராட் கோலி கடும் அதிருப்தி அடைந்தார். தோல்வி குறித்து அவர் கூறுகையில், 

இந்த மோசமான தோல்வி வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் சரிந்ததால் நெருக்கடி ஏற்பட்டு விடும். இது போல் இந்த ஆட்டத்தில் நடந்து விட்டது. ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருந்தது. நாங்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 70 ரன்னில் சுருண்டதால் பீல்டிங் செய்ய வர அணி வீரர்களுக்கு மனமே இல்லை. இந்த மோசமான தோல்வி சீக்கிரம் மறக்க விரும்புகிறோம் என்றார். 

ராஜஸ்தான் கேப்டன் கூறும் போது, தாம்பே பந்து வீச்சு அபாரமாக இருந்தது. குறிப்பாக விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றியது சிறப்பானது. பயிற்சியின் போது அவரது பந்தை எதிர்கொள்வது கடினமாக எனக்கு இருக்கும். அவர் சுழற்பந்தில் சிறந்த வீரர். 2 தோல்விக்கு பிறகு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago