முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 நாள் வேலை திட்டத்தில் அமிதாப் - சச்சின் பெயரில் மோசடி

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

பனாஜி, ஏப்.28 - 100 நாள் வேலை திட்டத்தில் அமிதாப்-, டெண்டுல்கர் பெயரில் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கிராமங்களில் வேலை இல்லதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு தினசரி சம்பளம ரூ.150. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், அமிதாபச்சன் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பலன்பெற்றதாக கோவாவில் மோசடி நடந்துள்ளது.தொண்டு நிறுவனம் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீவ் கோவா மானில அமைப்பிடமிருந்து இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.

டெண்டுல்கர், அவரது மனைவி, நடிகர் அமிதாபச்சன், அமீர்கான், கபில்தேவ், ராகுல்டிராவிட், கோவா முதல்வர் மனோகர் ஆகியோர் பலன்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தொண்டு நிறுவனத்தை சேர்ந்த யாதிஷ் நாயக் கூறியதாவது: ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சிம்பில் பகுதியில் இந்த மோசடி நடந்துள்ளது. கோடிக் கணக்கில்பண மோசடி நடந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

                    

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்