முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைத்ராபாத்தை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஷார்ஜா, ஏப்.29 - சன் ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் ஷிகர் தவான், பேடிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வரும் சென்னை அணியினர், இந்த போட்டியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 18 ஓவர்களில் ஹைதராபாத் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சர்மா மற்றும் சாமியின் கடைசி நேர அதிரடியால் கடைசி இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் சேர்த்து, 145 ரன்களுக்கு தனது இன்னிங்ஸை அந்த அணி முடித்தது. அதிகபட்சமாக ஃபின்ச் 44 ரன்கள் எடுத்திருந்தார். சென்னையின் ஹில்ஃபெனாஸ் மற்றும் மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 146 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சென்னையின் துவக்க வீரர்களாக களமிறங்கிய மெக்கல்லம் மற்றும் ஸ்மித், வழக்கம் போல அணியின் வெற்றிக்கு சிறப்பான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி பத்து ஓவர்களில் 75 ரன்கள் குவித்தது. 11-வது ஓவரில் கே.வி சர்மாவின் பந்தில் மெக்கல்லம் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஆட வந்த ரெய்னா 12 ரன்கள் அடித்து, அந்த ஓவரிலேயே வீழ்ந்தார். 37 பந்துகளில் அரை சதம் கடந்த ஸ்மித் 66 ரன்களுக்கு புவனேஷ்வர் குமாரின் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ப்ளெஸிஸும் டக் அவுட் ஆகி வெளியேற ஆட்டம் பரபரப்பானது. 

தொடர்ந்து வந்த ஜடேஜாவும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிலை மாறியது. கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் வர, மூன்றாவது பந்தை தோனி பவுண்டரிக்கு விரட்டினார். இறுதியில் சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்