உலகக் கோப்பை - இம்ரான் தாகீருக்கு சுமீத் பாராட்டு

Imraan

 

புது டெல்லி,பிப்.26  - உலகக் கோப்பை போட்டியில் பி பிரிவில் நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. 

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 47.3 ஓவரில் 222 ரன்னில் சுருண்டது. புதுமுக வீரர் இம்ரான் தாகீர் 41 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 43 பந்து எஞ்சிய நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் 105 பந்தில் 107 ரன்னும், டுவினி 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேப்டன் சுமித் 45 ரன் எடுத்தார். 

இந்த வெற்றி குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் சுமீத் கூறியதாவது, எங்களது எல்லா செயல்பாடுகளும் திருப்திகரமாக இருந்தது. எங்களது திட்டம் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை தருகிறது. லெக்ஸ்பின்னர் இம்ரான் தாகீர் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தி நெருக்கடி கொடுத்தார். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதானதல்ல என்றார். 

தென் ஆப்பிரிக்கா அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்தை வருகிற 3 ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மொகாலியில் நடக்கிறது. இதே போல் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தனது ஆட்டத்தில் நெதர்லாந்தை 28 ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ