முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக ஆளுனர் அறிக்கை - சரத்குமார் கருத்து

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - தமிழகத்தின் பதினான்காவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடரை தொடங்கி வைத்து தமிழக ஆளுநர் ஆற்றிய உரை சிறப்பான பல அம்சங்களைக் கொண்டு திகழ்கிறது. ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக அளிக்கும் அதே நேரத்தில், தொலைநோக்கு பார்வையுடன் வளர்ச்சித் திட்டங்களுக்கும், கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசு செயல்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது.

காவல்துறை குற்றங்களைக் குறைக்கவும், மின் ஆளுமை முறைகளைப் புகுத்தி குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தவும் முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சிறப்பான நிர்வாகத்தை வழங்கி, முதலீட்டாளர்கள் விரும்பு வந்து முதலீடு செய்யும் மாநிலமாக தமிழகத்தை மாற்றவேண்டுமானால், லஞ்ச் ஊழல் அற்ற நிலைமையை உருவாக்கினால் தான் அது சாத்தியமாகும் என்ற அடிப்படையில் பணி சார்ந்த நிர்வாக மறுசீறமைப்பு முயற்சிகள் மேற்கொள்ள விருப்பது வரவேற்கத்தக்கது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வீதமாக விலைக் கட்டுப்பாட்டு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கியிருப்பது. தமிழ்நாடு 2025 தொலை நோக்குப் பார்வைத்திட்டம் மரபுசாரா 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம், எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக தனியாக ஒரு கொள்கை, சென்னை மாநகர் மட்டுமின்றி கோவை, மதுரை மற்றும் திருச்சி மாநகராட்சிகளிலும் மோனோ ரயில் திட்டம், சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், சுற்றுலா வளர்ச்சித்திட்டம், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு பாராட்டத்தக்க விதத்தில் ஆளுனர் உரை அமைந்துள்ளது.

தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் கெளரவமாக வாழ தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதை வரவேற்கிறோம். அவர்கள் அனைவரும் தாங்கள் சொந்தப் பகுதியிலேயே மறுவாழ்வு பெற நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

புதிதாக அமைந்திருக்கும் தமிழக அரசு பொறுப்பேற்ற உடனேயே ஏழை மக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி, மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகையை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கியது என தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்தத்தில் இன்றைய ஆளுநர் உரை தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி மலர்ந்திருக்கிறது என்பதற்கு முன்னோட்டமாக அமைந்திருக்கிறது என்றே கூறலாம்.இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis