முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 6-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.4 - ஜூன் 12-க்கு பதில் ஜூன் 6-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று கவர்னர் உரையில் சுர்ஜித் பர்னலா அறிவித்துள்ளார். நேற்று சட்டபேரவையில் கவர்னர் உரையில் சுர்ஜித் பர்னலா பேசியதாவது:-​

பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டுமெனில் முதன்மை நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை துறைகள் ஒரு சேர சேர்ந்து வளர்ச்சி அடையவேண்டும். ஆனால் முதன்மைத் துறையான வேளாண்மையில் 11-வது திட்டக் காலம் தொடங்கி, 2007-2010 வரை, ஒட்டுமொத்த வளர்ச்சி எதிர்மறையாக 1.18 சதவீதம் என குறைந்துள்ளது. இதனால் 11-வது திட்ட காலத்தில் முதன்மைத் துறையில் 4 விழுக்காடு வளர்ச்சி என்ற குறிக்கோளை எட்ட இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த அரசு முதன்மை துறையான விவசாயம், கால்நடைத் துறை, மீனளம் போன்றவற்றின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தும். விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் தமிழ்நாட்டிலுள்ள 75 இலட்சம் சிறு குறு விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் வகையிலும் பண்ணைசார் சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். வேளாண் உற்பத்தித் திறனை பெருக்கக் கூடிய வகையில் நெல், பயிறு, கரும்பு, பருத்தி போன்ற பயிர்களுக்கான உற்பத்தி வழிமுறைகள் தனித்தனியே திட்டமிடப்பட்டு வேளாண் துறைக்கு புத்துயிர் அளிக்கப்படும். துல்லிய பண்ணை முறை, நுண்ணீர் பாசனத் திட்டங்கள் முதலியவை பெரிய அளவில் செயல்முறைக்குக் கொண்டு வரப்படும். தேவையான அளவு உணவு உற்பத்தியை உறுதி செய்யும் அதே வேளையில் குறைந்த மதிப்புள்ள பயிர்களுக்குப் பதிலாக அதிக வருவாய் தரும் பயிர்களைப் பயிரிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வவிசாயிகள் பங்களிப்புடன் விவசாய பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சந்தை வசதி, சேமிப்புக் கிடங்களிகள் மற்றும் குளிர் சாதன வசதிகளை உருவாக்குதல் போன்ற பணிகளையும் இந்த அரசு தீவிரமாக மேற்கொள்ளும்.

வேளாண்மையில் ஒரு நீடித்த நிலையான வளர்ச்சியை எய்த பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிக முக்கியான தேவையாகும். இந்த அரசு மாநில நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தி பாசன ஆதாரத்தைப் பெருக்கும். இதனால் வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதுடன் இத்தகைய கால்வாய்கள் நீர்வழிப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு பொதுவாகத் திறக்கப்படும் ஜூன் 12 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 6-ம் தேதி அன்றே தண்ணீர் திறந்து விடப்படும். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு குறித்த காலத்திற்கு முன்பே பாசனத்திற்கு நீர் திறந்து விடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காவிரி டெல்டா பகுதி வேளாண் பெருமக்கள் விவசாயப் பணிகளை உரிய காலத்தில் மகிழ்ச்சியுடன் தொடங்க இயலும்.

வறுமையை முழுமையாக அகற்றுவதே இந்த அரசின் கொள்கையாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இல்லையெனில் பொருளாதார வளர்ச்சியினால் மட்டுமே வறுமையை முழுமையாக அகற்றி விட முடியாது என்ற உண்மையை இந்த அவசு நன்கு உணர்ந்துள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis