முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்குற்றப் புகாரை விசாரிக்கத் தயார்: இலங்கை ராணுவம்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,ஜூன்.4 - இலங்கை ராணுவத்தின் மீது கூறப்படும் சில குறிப்பிட்ட போர் குற்றப் புகார் குறித்து விசாரிக்கத் தயார் என்று அந்நாட்டு ராணுவ தளபதி கூறியுள்ளார். விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது பிடிபட்ட தமிழர்கள் பலரை மிக கொடூரமாக சித்ரவதை செய்து இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ராணுவ வீரர்கள் கொலை செய்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போரில் இருதரப்புமே போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. விசாரணை குழு அறிக்கை அறிவித்துள்ளது. ஐ.நா. சபையில் இலங்கை போர் குற்றத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அதற்கு வழங்கப்படும் சர்வதேச உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு அந்த நாடு தனிமைப்படுத்தப்படும். 

இதனை எப்படியாவது தடுத்தி நிறுத்தி விட வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே முயன்று வருகிறார். இந்நிலையில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சிலவற்றை பற்றி விசாரிக்க தயாராக இருப்பதாக இலங்கை ராணுவ தலைமை லெப்டினட் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்யா கூறியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போரின் போது இலங்கை ராணுவம் பொதுமக்கள் யாரையும் கொலை செய்யவில்லை. அப்படி யாராவது கொல்லப்பட்டார்கள் என்றால் அவர்களது உறவினர்கள் முன்வந்து எங்களிடம் புகார் தரலாம். அது குறித்து விசாரணை நடத்தப்படும். ராணுவத்தின் மீது கூறப்பட்டுள்ள சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க தயாராகி வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago