இந்தியா-பாக். இடையே விசா வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஜூன்.4 - பாகிஸ்தான் இடையே விசா வழங்குவதில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் இஸ்லாமாபாத்தில் பேச்சு நடத்தினர். இதில் இரு நாடுகளை சேர்ந்த உள்துறை, வெளியுறவு துறை அமைச்சக உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக டெல்லியில் மார்ச் மாதம் இது போன்றதொரு பேச்சு நடைபெற்றது. இப்போது அடுத்தகட்டமாக இஸ்லாமாபாத்தில் பேச்சு நடைபெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே இப்போது கடுமையான விசா கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் சில குறிப்பிட்ட இடங்களுக்குத்தான் செல்ல முடியும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 

இது போன்ற கடுமையான விதிமுறைகளை தளர்த்துவது, விதிகளை இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப நெறிப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். மும்பையில் கடந்த 2008 ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை அடுத்து அங்கிருந்து இந்தியா வருபவர்களுக்கான விசா பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால் இப்போது மீண்டும் பாகிஸ்தானியர்களுக்கு அதிக அளவில் விசா வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் சராசரியாக ஒரு லட்சம் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வர விசா வழங்கப்பட்டது. அதே போல பாகிஸ்தான் சுமார் 40 ஆயிரம் இந்தியர்களுக்கு வழங்கியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: