முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கப்பல் உதவி கேப்டனுக்கு ஜாமீன்

வியாழக்கிழமை, 1 மே 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மே 2 - அமெரிக்க கப்பல் உதவி கேப்டனுக்கு சென்னை ஐகோர்ட் மன்ற மதுரைக்கிளை இடைக்கால் ஜாமீன் வழங்கியது.

தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் சிக்கிய அமெரிக்க கப்பலின் துணை கேப்டன் பால் டேவிட் டென்னிஸ் டவஸ் தாக்கல் செய்தமனுவை விசாரித்த நீதிபதி ஐ.எம்.அக்பர் அவி இவ்வாறு உத்தரவிட்டார். மனுவில், கடற்கொள்ளையர்களிடம் கப்பல்களை பாதுகாக்கும் தந்திரங்களை கையாளும் பொருப்பு மட்டுமே எனக்கு தரப்பட்டது. நிர்வாக ரீதியான பொறுப்பு ஏதும் கிடையாது. புழல் சிறையில்  உடலில் கட்டி ஏற்பட்டு அவதிப்படுகிறேன். மேலும், விரைவீக்கம், இருதய நோய் பிரச்னைகளும் உள்ளன . 

கட்டியை அகற்றாவிட்டால் புற்று நோய் எற்படும் ஆபத்து உள்ளது. கட்டியை அகற்ற தேவையான சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, மரும் ஜூன் 9-ஆம் தேதி வரையில் ஜாமீனில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஜூன் 10-ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 

கப்பலின் கேப்டன் துக்னிக்வாலண்டைன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்