முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படும்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன் 4 - தனியார் கேபிள் டி.வி.க்கள் அரசு உடமையாக்கப்படும் என்று கவர்னர் உரையில் சுர்ஜித்சிங் பர்னாலா அறிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் கவர்னர் உரையில் சுர்ஜித்சிங் பர்னாலா தெரிவித்ததாவது:-

முந்தைய அரசால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது செயலற்ற நிலையில் உள்ளது. அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை உயிர்ப்பித்து மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்து கேபிள் சேவையை நியாயமான கட்டணத்தில் வழங்கவேண்டும் என்று பொதுமக்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, பொதுநலனைக் கருத்தில் கொண்டு இந்த நிறுவனத்தை புதுப்பித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன் கடைக்கோடியில் உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்கள் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமை ஆக்கப்படும்.

மின்சாரம், சாலை வசதி, நகர்ப்புற கட்டமைப்புகள், வீட்டு வசதி ஆகிய உட்கட்டமைப்புகளில் உள்ள குறைவைப் போக்க தொடர்ந்து நீடித்த பொருளாதார வளர்ச்சியைப் பெறவழிவகை செய்யப்படும். இத்தகைய பணிகளை மேற்கொள்ள கணிசமாக நிதி தேவைப்படும் நிலையில் மாநில அரசிடம் உள்ள வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரத்தைக் கொண்டு மட்டும் திட்டங்களை செயல்படுத்த இயலாது. எனவே, நிதி ஆதாரத்தை திரட்டுவதுடன், முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையான அணுகுமுறை பின்பற்றப்படும். அரசு தனியார் தொழில் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியை இந்த அரசு செயல்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்