முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடா நட்பு...! காங்கிரஸ் மீது கருணாநிதி தாக்கு

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்,4 - கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்று கட்சி தொண்டர்களுக்கு தனது பிறந்தநாள் செய்தியை தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி,  காங்கிரஸ் கட்சியை இதன்மூலம் மறைமுகமாக தாக்கியுள்ளார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 88-வது பிறந்தநாளையொட்டி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது நிருபர்களிடம் பிறந்த நாள் செய்தியை தெரிவித்த கருணாநிதி, சமுதாய எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை ஒப்படைத்துக்கொண்ட தோழர்கள், உடன்பிறப்புக்கள் கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பொன்மொழியை மறந்துவிடாமல் தங்கள் பயணத்தை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

முன்னதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி காலை 7.30 மணியளவில் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தி.க. தலைவர் வீரமணி வரவேற்று புத்தகங்களை வழங்கினார். வழக்கமாக கருணாநிதி பிறந்தநாளில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுவார். இந்த தடவை தொண்டர்களை சந்திக்கவில்லை. இருப்பினும் அன்பழகன், நேரு, பெரியசாமி உட்பட பெரும்பாலான கட்சியின் முக்கிய புள்ளிகள் மற்றும் தொண்டர்கள் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுமுன் கூடியிருந்தனர். காலை 7 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே வந்த கருணாநிதி யாரிடமும் சால்வை போன்றவைகளை பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களை பார்த்து கையசைத்துவிட்டு அண்ணாநினைவிடத்திற்கு புறப்பட்டு சென்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony