சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் பாபா ராம்தேவ்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.5 - ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ் நேற்று டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இந்த உண்ணாவிரத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதை ஒழிக்கக்கோரியும் கறுப்பு பணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாபா ராம்தேவ்,சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அதனால் மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ராம்தேவுடன் சமாதான முயற்சியில் மத்திய அமைச்சர்கள் ஈடுபட்டனர். ராம்தேவை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் கபில் சிபல், சுபோத் காந்த் சகாய் ஆகிய அமைச்சர்கள் ராம்தேவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது. ராம்தேவ் உண்ணாவிரதத்தால் ஏற்படும் சூழ்நிலை குறித்து ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசினார். மேலும் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். கடைசி முயற்சியாக ராம்தேவை மத்திய அமைச்சர்கள் பலர் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டர். அதுவும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்தநிலையில் திட்டமிட்டபடி ராம்தேவ் நேற்று புதுடெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரால் லீலா மைதானத்தில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது அங்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். ராம்தேவ் உண்ணாவிரதத்தில் இந்துமத சுவாமி சாதவி ரீதம்பரா மற்றும் முஸ்லீம், முஸ்லீம் உள்பட பல மத தலைவர்களும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

உண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு முன்பு யோகா மற்றும் பஜனை பாடல்களை ராம்தேவ் பாடினார். பின்னர் அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் சிறிது நேரம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ஊழலில் இருந்து நாட்டை காப்பாற்றவும் ஏழை மக்களுக்கு நல்வாழ்வை உறுதி செய்யவும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருப்பதாக கூறினார். எதுவும் முடியாதது என்பது கிடையாது. எதுவும் சாத்தியம்தான். நம்மை யாரும் தோற்கடிக்க முடியாது என்றும் ராம்தேவ் கூறினார். மைதானத்தில் போடப்பட்டுள்ள மேடையில் காவி உடை அணிந்து அமர்ந்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: