முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரை திறக்க முதல்வர் கடிதம்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.5  - சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க கண்டலேறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுமாறு கோரி ஆந்திரமுதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதி உள்ள கடிதம் வருமாறு, 

    சென்னை நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யும் அணைகளில் முழு அளவான 11 டி.எம்.சி அடிக்கு பதிலாக தற்போது 6 டி.எம்.சி அடி தண்ணீர்தான் உள்ளது என்பதை தங்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன். ஒட்டுமொத்தமாகவே அணைகளில் இவ்வளவு தண்ணீர்தான் உள்ளது. ஆனால் அக்டோபர் வரை சென்னை மக்களின் குடிநீர்  தேவைகளுக்கு தற்போது  தண்ணீரின் அளவு போதுமானதாக இருக்காது. 2010, 2011 ம்  ஆண்டில் 12 டி.எம்.சி அடிக்கு பதிலாக 4.6 டி.எம்.சி அடி தண்ணீர்தான் ஆந்திராவில் இருந்து எங்களுக்கு கிடைத்துள்ளது. ஆந்திராவில் கிருஷ்ணாகுடிநீர் சப்ளை திட்டத்தின் அனைத்து அணைகளிலும் தற்போது நீரின் இருப்பளவு திருப்திகரமாகவே உள்ளது என்று நான் நம்புகிறேன். எனவே சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு கண்டலேறு அணியிலிருந்து தண்ணீரை திறந்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு திறந்து விடுவதில் ஆந்திர அரசுக்கு கஷ்டம் இருக்காது என்றும் நம்புகிறேன். எனவே கண்டலேறு அணையிலிருந்து உடனடியாக தண்ணீரை திறந்து விட உத்தரவிடுமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன்.

   அப்படி திறந்து விட்டால்தான் தமிழக எல்லைக்கு குறைந்த பட்சம் ஆயிரம் கன அடி தண்ணீராவது வந்து சேரும். அந்த தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க  பயன்படும். இவ்வாறு  ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். தனது முந்தைய ஆட்சி காலத்திலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க ஜெயலலிதா கடும் முயற்சிகளை மேற்கொண்டார். புதிய வீராணம் திட்டத்தையும் கொண்டு வந்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய பெருமையும் முதல்வர் ஜெயலலிதாவையே சாரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago