தமிழகம் முழுவதும் நாளை 2ம் கட்ட சொட்டு மருந்து முகாம்

Polio

சென்னை, பிப். 26 - தமிழகம் முழுவதும் நாளை 2 வது கட்டமாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 2 வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை நடக்கவிருக்கிறது. கடந்த மாதம் நடந்த முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 70 லட்சம் பேர் பயன் பெற்றனர். ஏற்கனவே பயனடைந்த குழந்தைகள் அதற்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் என 40,399 சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம் நடக்கும் நாளன்று பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கென ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் 2400 டிரான்ஸிட் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தொலை தூர பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணியில் 980 நடமாடும் குழுக்கள் ஈடுபடுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ