முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமா - மெர்க்கெல் சந்திப்பு

சனிக்கிழமை, 3 மே 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மே 4 - பல்வேறு ரஷ்ய அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சமிபத்தில் தடை விதித்துள்ள நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும், சந்தித்துப் பேசினர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனிலுள்ள அதிபர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய படைகள், எல்லை தாண்டினால், நேரடி பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. எனினும், ரஷ்யாவில் கணிசமான அளவு வர்த்தக் முதலீடுகள் செய்துள்ள ஜெர்மனிக்கு அதனால் பாதிப்பு உண்டாகும் எனக் கூறப்பட்டது, ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்திருந்தது.

இந்த சூழலில் ஒபாமாவும், மெர்க்கெல்லும் சந்தித்திள்ளது, அதன் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்