முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாம்பழத்துக்கு தடை: பிரிட்டன் நாடாளு மன்றத்தில் விவாதம்

சனிக்கிழமை, 3 மே 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், மே 4 - இந்தியாவின் அல்போன்சோ ரக மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்த தடை குறித்து பிரிட்டன் நாடாளுமன்றம் அடுத்த வாரம் விவாதிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் லெபர் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எம்.பி.யான கீத் வாஸ் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் அல்போன்சா ரக மாம்பழங்களை இறக்குமதி செய்ய நிறந்தரமாக தடை செய்வது தொடர்பான விவாதத்திக்கு பிரிட்டன் நாடாளுமன்ற அவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விவாதம் இம்மாதம் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் இந்த மாம்பழங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வணிகர்களுக்கு பல மில்லியன் டாலர்கள் அளவு நஷ்டம் உண்டாகிறது. எனவே இந்த வர்த்தக நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக பிரிட்டன் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது என்று கீத் வாஸ் கூறினார்.ச

ஒவ்வொரு ஆண்டும் 6.3 மில்லியன் பவுண்ட், இந்திய மதிப்பில் சுமார் 64,000 கோடி மதிப்பிலான மாம்பழங்களை பிரிட்டன் அரசு இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்