முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நிதித்துறை உயர் பதவியில் இந்தியர்

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மே 5 - அமெரிக்க  நிதித்துறையின் உயர் பதவிக்கு அந்நாட்டில் வாழும் இந்தியரான ஜவஹர் கல்யானி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறையின் கீழ் செயல்படும் வங்கிகள் ஒழுங்காற்று அமைப்பின் மென்பொருள் சேவை விநியோகத்திர்கான, துணை தலைமைத் தகவல் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்து நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஜவஹர் கல்யானி நேற்று முதல் பொருப்பை ஏற்றுக் கொள்கிறார். தேசிய வங்கிகள் மற்றும் சேமிப்பு நிதி அமைப்புகளின் பாதுகாப்புக்கும், அவற்றை வலுப்படுத்துவதற்கும் தேவையான மென்பொருள் தொழில் நுட்பங்களை உருவாக்குவது மற்றும் அவற்றை அமலாக்குவது ஆகிய பணிகள் அவர் தலைமையில் மேற்கொள்ளப்படும்.புதிய மென்பொருள் தொழில் நுட்பங்கள் மூலம் வர்த்தக ரீதியிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஜவஹர் அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

மும்பையில் உள்ள வீரமாதா ஜீஜாபாய் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை பொறியியல் பட்டமும், மும்பை தொழில் நுட்ப நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பும் முடித்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்