முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுனிசியா அருகே கப்பல் கடலில் மூழ்கி 150 பேர் பரிதாப சாவு

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

ஜ.நா.ஜூன்.5 - எகிப்தை தொடர்ந்து லிபியாவில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டதால், லிபியா மீது நேட்டோ படை குண்டு வீச்சு தாக்குதல் நடத்திவருகிறது. 

லிபியா ராணுவத்தினருக்கும் போராட்டக்காராகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. இதனால் லிபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் பலர் வெளியேறி வருகின்றனர். ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த சுமார் 850 பேர் தலைநகர் ட்ரிபோலியை விட்டு கப்பல் மூலம் கடந்த 28 -ம் தேதி வெளியேறினர். இத்தாலியை சேர்ந்த லம்படுசா தீவுக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.  டுனிசியா அருகே நேற்றுமுன்தினம் மத்திய தரைக்கடல் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது பாரம் தாங்காமல் கவிழந்தது. இதில் சுமார் 150 பேர் கடலில் மூழ்கி இறந்ததாகவும், பலரை காணவில்லை என்றும் ஜ.நா. தகவல் தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் டுனிசியா கடற்படை ஈடுபட்டுள்ளது. கப்பலை இயக்கிய மாலுமிகள் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என வும், 3 -வது நாளிலேயே கப்பலில் பயணம் செய்தவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டனர் என்றும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago