Idhayam Matrimony

புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்சுக்கு முதல் இடம்

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே 5 - 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.  முதல் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த 30-ஆம் தேதியுடன் முடிந்தது. அங்கு மோத்தம் 20 ஆட்டங்கள் நடத்தப்பட்டது. மே 2-ஆம் தேதி முதல் 2-வது கட்ட போட்டிகள் இந்தியாவில் தொடங்கியது. நேற்றுடன் 24 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இந்தப் போட்டித் தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நேற்று முன் தினம் முதல் தோல்வியை கண்டது. இதனால் அந்த அணி புள்ளகள் பட்டியலில் முதல் இடத்தில் இருநது இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.

சென்னை, பஞ்சாப் அணிகள் 5 வெற்றி ஒரு தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப்பைவிட முன்னிலையில் இருப்பதால் சென்னை அணி முதல் இடத்தை பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவிலிஸ் அணியை இன்று சந்திக்கிறது. இதில் வென்றால் சென்னை அணி தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும்.

அதையடுத்து ராஜஸ்தான் ரையல்ஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி டேர்டெவிலிஸ் ஆகிய 4 அணிகள் 4 புள்ளிகள் பெற்றுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடமான 8-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்