முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி., தொடர்: கோலி - புஜாரவுக்கு முக்கியத்துவம்: கெவின்

திங்கட்கிழமை, 5 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, மே 6 - இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு விராட் கோலியும், சிதேஷ்வர் புஜாராவும் மிக முக்கியமான வீரர்களாகத் திகழ்வார்கள் என்று , முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் தெரிவித்தார். 

இந்திய அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் பீட்டர்சன் கூறியிருப்பதாவது: உலகின் தலைசிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள அணிகளில் இந்தியாவும் ஒன்று. அப்படிப்பட்ட இந்திய அணி, சிறந்த கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி புதிதாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியில் வியக்கத்தக்க வகையில் திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். புஜாரா, விராட் கோலி, முரளி விஜய் போன்றோர் இங்கிலாந்து மண்ணில் ரன் குவிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். இவர்கள் மூவரும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பது முக்கியம். இதற்கு முந்தைய தொடரில் ராகுல் திராவிடை தவிர வேறு யாரும் ரன் குவிக்கவில்லை. ஆனால் இந்த முறை திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்” என்றார். 

கடைசியாக 2011-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதில் 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது இந்திய அணி. அந்தத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு முக்கிய வீரராக இருந்த பீட்டர்சன், லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago