முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் உறவு - பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஜூன்.5 - பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றதற்கு பாகிஸ்தான் அரசுதான் உதவியதாக தலிபான் தீவிரவாதிகள் கருதுகின்றனர். எனவே இதற்கு பழிவாங்கும் வகையில் தலிபான்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் தெக்ரிக் இ தலிபான் இயக்கத்தின் தலைவர் மவுலானா பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளிக்கையில், அமெரிக்காவுடன் பாகிஸ்தான் உறவு வைக்க கூடாது என்று நாங்கள் பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து உறவு நீடித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பாகிஸ்தான் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். கடந்த 22 ம் தேதி கடற்படை தளத்தில் தாக்குதல் நடத்தினோம். இனி தொடர்ந்து ராணுவ முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவோம். ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினால் ராணுவ வீரர்களுக்கு அச்சம் ஏற்படும். ராணுவத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள். 

இதன் மூலம் அரசு பணிகள் ஸ்தம்பிக்கும். இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி பாகிஸ்தான் அரசை பணிய வைப்போம். எனவே இதுவரை நடந்த தாக்குதலை விட இனி நடக்கும் தாக்குதல்கள் மிக கடுமையானதாக இருக்கும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை தாக்குவதுதான் எங்களுக்கு குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்போதைய நிலையில் பாகிஸ்தானை பணிய வைக்க வேண்டியதுள்ளது. எனவே எங்கள் கவனத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்