முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் - செக். குடியரசு வீராங்கனைகள் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். 5 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவி ன் இறுதிச் சுற்றில் செக். குடியரசு வீராங்கனைகள் வெற்றி பெற்று சா ம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். சானியா மிர்சா இணை ரன்னர்ஸ் அப் பட்டம் வென்றது. 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் உலக நம்பர் - 1 வீரரான ரேபல் நடால் நம்பர் - 3 வீரரான ரோஜர் பெடரர் ஆகியோர் அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீர ர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையா  ன சானியா மிர்சா, ரஷ்ய வீராங்கனை எலீனா வெஸ்னினாவுடன் இணைந்து ஆடி வருகிறார். இந்த ஜோடி இறுதிச் சுற்றில் செக். குடியர சு இணையை எதிர்கொண்டது. 

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றில் செக். குடியரசைச் சேர்ந்த அன்ட்ரியா ஹிலவகோவா மற்றும் லூசி ஹிராடெக்கா இணை அபாரமாக ஆடி, 6- 4, 6 - 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது. 

இந்த வெற்றியின் மூலம் கடந்த 30 வருடங்களில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற தகுதி நிலை பெறாத 6 -வது ஜோடி என்ற பெருமை செக். குடியரசு இணைக்கு கிடைத்துள்ளது. சானியா ஜோடி இந்தப் போட்டியில் 7 -ம் நிலை ஜோடியாகும். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரை இறுதிச் சுற்று ஒன்றில் நடப் பு சாம்பியனான ரபேல் நடாலும், இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஆன்டி முர்ரேவும் பலப்பரிட்சை நடத்தினர். 

இதில் உலக நம்பர் - 1 வீரரான ரபேல் நடால் அபாரமாக ஆடி, 6 - 4, 7 - 3, 6 - 2 என்ற நேர் செட் கணக்கில், 4 -ம் நிலை வீரரான முர்ரேயை எளிதில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

தனது 25 -வது பிறந்த நாளில் நடால் இந்த வெற்றியைப் பெற்றார். 5 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பற்றிய அவர் தற்போது 6 -வ து முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். அவர் 6-வது பட்டம் வெல்லும் பட்சத்தில் ஜார்ன் போர்க்கின் சாதனையை முறியடிப்பார். 

மற்றொரு அரை இறுதியில் சுவிஸ் வீரரும், உலகின் 3 -ம் நிலை வீரரு மான ரோஜர் பெடரரும், செர்பிய வீரரும் 2 -ம் நிலை வீரருமான டிஜோகோவிக்கும் மோதினர்.  இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருந்தது. 

4 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தின் இறுதியில் பெடரர் 7 - 6 (7 -5), 6 - 3, 3 - 6, 7- 6 (7 - 5) என்ற செட் கணக்கில் செர்பிய வீரரை தோற்கடித் து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பெட ரருக்கு 3 மணி நேரம் 39 நிமிடம் தேவைப்பட்டது. 

உலக முன்னாள் நம்பர் - 1 வீரரான ரோஜர் பெடரர் 5 -வது முறை யா க பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார். இதில் 2009 - ம் ஆண்டு பட்டம் வென்றார். 2006, 2007, 2008 பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் அவர் நடாலிடம் தோற்று இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்