முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க ஊழல்: தாசரி - ஜிண்டால் மீது புது வழக்கு

புதன்கிழமை, 7 மே 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மே 7 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு  முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் தாசரி நாராயணராவ், காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டா ல் மற்றும் ஒதுக்கீடு பெற்ற  நிறுவனங்கள் மீது கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு  முறைகேடு தொடர்பாக தாசரி நாராயணராவ், நவீன் ஜிம்டால் மற்றும் ககன் பாஞ்ச் அயர்ன் லிமிடெட்,  ஜிண்டால் ரியாலிட்டீஸ், ஸ்டயீல் அண்ட் பவர் லிமிடெட்,  நியூடெல்லி எக்ஸிம் பிரைவேட்  லிமிடெட் மற்றும் சிலர் மீது ஏற்கெனவே மத்திய புலனாய்வுத் துறை  வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

  இந்த நிலையில் சி.பி.ஐ.யின் குற்றச்சா ட்டுகளை ஆய்வு செய்ததில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனை  செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக  அமலாக்கத் துறை  நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.   சுரங்க உரிமம் பெறுவதற்காக  லஞ்சமாக கறுப்புப் பணம்  பயன்படுத்தப்பட்டிருப் பதையும், அதிதாரிகள் கண்டுபிடித் திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத்திலுள்ள தாசரி நாராயண ராவுக்கு சொந்தமான அலுவலகத்துக்கும், ஜிண்டாலுக்குச் சொந்தமான நிறுவனத் துக்கும், இடையே சட்ட விரோதமான  பணப் பரிவர்த்தனை நடந்திருப்ப தாகவும், அமலாக்கத் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்த நிலையில் கருப்புப்பண தடுப்புச் சட்டத்தின் கீழ்  தாசரி நாராயணராவ் உள்ளிட்டோர் மீது புதியவழக்கை அமலாக்க துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து  தாசரி நாராயணராவ் அளித்த பேட்டி வருமாறு:

நிலக்கரி சுரங்க ஒதுகக்கீட்டை எல முறையில் மேற்கொள்ள வேண்டும்  என்று நான் கூறியபோது அதை    நான் மறுத்ததாக பரேக் குற்றம் சாட்டியுள்ளார் .

அந்த விவகாரத்தில் நான் ஒத்துழைக்கவில்லை  என்பதே அதற்கு அர்த்தம்.  ஒத்துழைக்கமல் இருப்பதற்கு நான் யார்?. அப்போது நான் இணை அமைச்சராக இருந்தேன். நிலக்கரி துறைக்கு கேபினட் அமைச்சர் இருந்தார்.    சில நேரங்களில் நிலக்கரி துறை அமைச்சராக சிபுசோரன் இருந்தார். சில நேரங்களில் பிரதமரே அத்துறையை கவனித்து வந்தார். 

ஒருளை நான் தவறு செய்திருந்தால் பிரதமர் என்னை பதவியிலிருந்து நீக்கி இருக்க முடியும் என்றார். அதை ஏன் செய்யவில்லை என்றும் அவர் கேட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!