சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு: மதுரை ஆதீனம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஜூன்.5 - சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் எல்லாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாகும். இந்நாளில்தான் ஆதீனங்களிலும், திருமடாலயங்களிலும், பூஜைகள், வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். 

மேலும் இந்த இடங்களில் அன்றுதான் பஞ்சாங்கம் வாசித்து காட்டுவதும் மரபாக இருந்து வருகிறது. அதில் நாட்டின் நிலை குறித்த பல்வேறு செய்திகள் வானிலை, பூமி தொடர்பான தகவல்கள், விவசாயம், அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் போன்றவை விரிவாக எடுத்துரைக்கப்படும். எனவே சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுக்கு பொருத்தமான நாளாகும். இவ்வாறு ஆதீனம் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: