முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் செரீனா

வெள்ளிக்கிழமை, 9 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

மாட்ரிட், மே 10 - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சீனாவின் லீ நா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். உலகின் 2-ம் நிலை வீராங்கனையான லீ நா 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸை தோற்கடித்தார். 

நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்லா சுரேஜை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார். தொடர்ந்து 3-வது முறையாக மாட்ரிட் ஓபனில் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள செரீனா, தனது காலிறுதியில் உலகின் 5-ம் நிலை வீராங்கனையான செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவை சந்திக்கிறார். 

விட்டோவா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான லூஸி சபரோவாவைத் தோற்கடித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago