மே. வங்காளத்தில் காங்கிரசாருக்கு மேலும் 5 அமைச்சர்கள் பதவி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஜூன்.5 - மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த மந்திரிசபையில்  மேலும் 5 காங்கிரஸ் அமைச்சர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றாலும் தனது மந்திரிசபையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என்று மம்தா பானர்ஜி விரும்பினார். கடந்த மே மாதம் 20 ம் தேதி மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜியின் தலைமையில் அரசு பதவியேற்றது. முதலமைச்சராக மம்தாபானர்ஜியுடன் 38 அமைச்சர்கள் பதவியேற்றனர். காஙகிரஸ் சார்பில் மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் மேனிஸ்புனினா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் அபுகென்னா ஆகியோர் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர். மேலும் மம்தாவின் அமைச்சரவையில் 5 காங்கிரசாருக்கு பதவி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களான பர்மதா நாத்ராய், அபுநிசர்கான் சவுத்ரி, மனோஜ் சக்ரபோர்தி, சுனில் சந்திரா திர்கி, சபீனா யாஸ்மின் ஆகியோர் மேற்கு வங்காள அமைச்சர்களாக நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் மம்தா முன்னிலையில் 5 பேருக்கும் மேற்கு வங்காள கவர்னர் எம்.கே.நாராயணன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவி ஏற்பு நடைபெற்றதும் காங்கிரஸ் பெண் மந்திரி சபீனா யாஸ்மின் மம்தாவின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். மொத்தம் 43 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள இந்த மந்திரி சபையில் மொத்தமுள்ள 7 காங்கிரஸ் அமைச்சர்களில் 2 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள அமைச்சரவையில் 3 பெண் அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சராக பதவியேற்ற சபீனா யாஸ்மின் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: