முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் 32 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வென்றது

சனிக்கிழமை, 10 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

 

பெங்களூர், மே 11 - ராயல் சாலங்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியை கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதன் மூலம் 8 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் தொடர்ந்து அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பஞ்சாபின் துவக்க வீரர்கள் சேவக் மற்றும் மந்தீப் சிங் இருவரும், அதிரடி ஆட்டத்துடன் ஆரம்பித்தனர். மந்தீப் சிங் 15 பந்துகளில் 21 ரன்களுக்கும், சேவாக் 24 பந்துகளில் 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

வழக்கம் போல களத்தில் இணைந்த மில்லர் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி, தங்களது முந்தைய ஆட்டங்களின் விளாசலை மீண்டும் வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் மேக்ஸ்வெல்லின் அதிரடி வெகு நேரம் நீடிக்கவில்லை. 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது சஹாலின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 

சென்ற போட்டியில் அசத்தலாக ஆடிய பெய்லி, 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த மில்லர் , மேக்ஸ்வெல்லின் பணியை எடுத்துக் கொண்டார். 23 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த அவர், 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்களை எட்டினார். 

ஆரோன் பந்துவீச்சில் சஹால் பிடித்த அபாரமான கேட்ச்சினால் மில்லர் வெளியேறினார். இதற்குப் பின் பஞ்சாப் அணியின் ஸ்கோர் சேர்க்கும் வேகம் கணிசமாகக் குறைந்தாலும், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 198 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

பஞ்சாப் நிர்ணயித்த 199 ரன்கள் என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி தனது சொந்த மண்ணில் பேட்டிங்கைத் தொடங்கியது. துவக்க வீரர் கெயில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து வந்த கோலி, தனது முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அடுத்த அதிர்ச்சியைத் தந்தார். 

இதனையடுத்து, பார்த்தீவ் பட்டேல், ராணா, யுவராஜ் சிங் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, தேவைப்படும் ரன்ரேட் ஏறிக் கொண்டே போனது. ஒரு முனையில் வீரர்கள் வெளியேறிக் கொண்டிருக்க, டி வில்லியர்ஸ் மட்டும் தனியாளாக வெற்றிக்கு போராடினார். 15-வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை மட்டுமே பெங்களூரு எடுத்திருந்தது. 

16-வது ஓவரில் 53 ரன்களுக்கு (26 பந்துகள், 1 பவுண்டரி, 5 சிக்ஸர்கள்) டிவில்லியர்ஸும் ஆட்டமிழக்க பஞ்சாபின் வெற்றிவாய்ப்பு உறுதியானது. 20 ஓவர்கள் வரை போராடிய பெங்களூரு அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் கூறியதாவது: பெங்களூர் அணியில் வீரர்கள் ஒருங்கிணைந்து ஆட வில்லை. கடந்த சில் ஆட்டங்களில் நடந்ததுபோல் நடைபெறுகிறது. ஒற்றுமையாக ஆடாத்தே தோல்விக்கு முக்கியமான காரணம். எங்களது பந்து வீச்சு நன்றாக இருந்து ஒரு சில் முடிவுகள்  துரதிருஷ்டவசமாக அமைந்தது. தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்துவிட்டதால் ரன் இலக்கை நோக்கி முன்னேற முடியவில்லை. கடந்த சில ஆட்டங்களில் பேட்டிங் சரியா அமையாததே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்