முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானிடம் தோல்வி: வீராட் கோலி பேட்டி

திங்கட்கிழமை, 12 மே 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், மே 13 - 7-வது ஐ.பி.எல் 35-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி பெங்களூரை வீழ்த்தி 6-வது வெற்றியை கண்டுள்ளது.

முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்தது. இதில் அதிகபட்சமாக இதுவரை சரியான ஆட்டத்தை வெளிபடுத்தாமல் இருந்த  யுவராஜ் சிங் 38 பந்தில் 83 ரன்னும், டிவில்லியர்ஸ் 32 பந்தில் 58 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி 7 பந்து எஞ்சி இருந்த நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கருண் நாயர் 58 ரன் எடுத்தார். வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து சுமித் 21 பந்துகளில் 48 ரன்னும், பல்க்னெர் 17 பந்தில் 41 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 13.3 ஓவர்களில் 106 ரன்னுக்கு 5 விக்கெட்களை இழந்து சரிவில் இருந்த போது இந்த ஜோடி அதிரடியாக ஆடி வெற்றியை தெடி தந்தனர்.

பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி கூறுகையில்: பெங்களூர் அணியின் நல்ல வெற்றி வாய்ப்பை பந்து வீச்சாளர்கள் வீணடித்துவிட்டனர். 17-வது ஓவரில் ஸ்டார்க் 21 ரன்னும், 18-வது ஓவரில் அசோக்திண்டா 23 ரன்னும், 19-வது ஓவரில் வருண்ஆரோன் 5 பந்தில் 21 ரன்னும் கொடுத்தனர். இதனால் கடைசி 3 ஓவரில் ராஜஸ்தான் அணி 64 ரன்கள் எடுத்துள்ளது. எங்களுக்கு நம்பிக்கை இருந்தது ஆனால் பந்து வீச்சாளர்கள் கோட்டை விட்டு விட்டனர். பவுலர்களால் கடைசி வரை யார்க்கர் பந்தை வீச முடியாமல் போனது ஏமாற்றமே. அபாரமாக பேட்டிங் செய்யும் போது யார்க்கர் பந்து வீசுவது தான் அவசியமானது. அதை செய்ய தவறிவிட்டனர். இவ்வாறு வீராட் கோலி கூறினார்.

 இந்த தோல்வியின் மூலம் பெங்களூர் அணி 6-வது தோல்வியை கண்டுள்ளது. அதே நேறத்தில் ராஜஸ்தான் அணி 4 வது வெற்றியை பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி இனறு சென்னை அணியுடன் மோதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்