முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை வீச்சு

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூன்.- 6 - டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது யாரும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். ராம்லீலா மைதானத்தை மீட்க வேண்டும் என்று முடிவு செய்த போலீசார் திட்டமிட்டு ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.  நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மைதானத்தை சுற்றி கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டு 9 மணியளவில் மைதானம் சீல் வைக்கப்பட்டது. இரவு 11 மணி வரை போலீசார் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். இதனால் உண்ணாவிரதம் இருந்தவர்கள் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தனர். ராம்தேவும் மேடையிலேயே தூங்கினார். நள்ளிரவு ஒரு மணிக்கு திடீரென அதிரடியாக போலீசார் மைதானத்திற்குள் நுழைந்தனர். 

அந்த நிமிடம் ராம்தேவும், அவருடைய சீடர்களும் அதிர்ச்சியுடன் விழித்தனர். ராம்தேவை கைது செய்யப் போவதாக தகவல் பரவியதால் ராம்தேவ் சீடர்கள் அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். அப்போது போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் போலீசாருக்கும், மைதானத்தில் இருந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் ராம்தேவ் சீடர்கள் 30 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர். 

தொடர்ந்து தடியடி நடத்துவதை போலீசார் கைவிடவில்லை. அதையும் மீறி நூற்றுக்கணக்கானவர்கள் தரையில் பிடிவாதமாக உட்கார்ந்திருந்தனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி மைதானத்திற்கு வெளியில் கொண்டு போய் விட்டனர். இந்நிலையில் ராம்லீலா மைதான பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். மறுத்தவர்கள் கண்ணீர் புகை அடித்து வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டனர்.  போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களையும் அவர்கள் கையை பிடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் போலீசார். 

இதனால் மூன்று மணிக்கு உண்ணாவிரதம் இருந்த பந்தல் வெறிச்சோடி கிடந்தது. அங்குள்ள பூத்தொட்டிகள், மின் விசிறிகள், ஏர்கூலர்கள் உடைந்து கிடந்தன. உண்ணாவிரதம் இருந்த பெண்களின் கைப்பை, செருப்புகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்து போர்க்களம் போல் காட்சியளித்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மைதானத்தில் போடப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலின் ஒரு பகுதி எரிக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்த மேடையும் பிரிக்கப்பட்டது. நேற்று காலை ராம்லீலா மைதானத்தில் அமைதி நிலவியது. போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago