முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடி

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்.- 7 - ராம்தேவின் சொத்துமதிப்பு ரூ.1000 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் ராம்தேவ் பத்து வருடத்திற்கு முன்பு சாதாரண நிலையிலிருந்தார். அவருக்கு ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வந்தது எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஹரியானா மாநிலம் அலிசையத்பூர் கிராமத்தில் 1965 ல் ராம் நிவாஸ் யாதவ் என்ற சாதாரண விவசாயிக்கு பிறந்தவர். யோகாசனத்தில் ஆர்வம் காட்டிய அவர் 1995ல் திவய் யோகா மந்திர் என்ற அமைப்பை ஏற்படுத்தி யோகாசனம் கற்றுக்கொடுத்தார். தனது 9வது வயதில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடியவர் என்றும் கூறப்படுகிறது. 2003ல் ஆஸ்தா டி.வி.யில் யோகாசனம் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி பிரபலமானார். அதன்பிறகு அவருக்கு சொத்து குவிந்தது. தற்போது அவரிடம் ரூ.1000 கோடி அளவிற்கு சொத்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஹரித்துவாரில் பதஞ்சலி யோகா பீடம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 300 படுக்கை கொண்ட ஆயுர்வேத ஆஸ்பத்திரி, யோகாசனா ஆராய்ச்சி மையம், பல்கலைக்கழகம், உணவுக்கூடம், ஆஸ்தா டி.வி., இங்கிலாந்து அருகே ஒரு குட்டித்தீவு போன்றவை இவர் பெயரில் உள்ளது. இவர் எங்கு சென்றாலும் தனிவிமானத்தில் தான் பயணம் செய்கிறார். 10 வருடத்திற்கு முன்பு இவர் ஒரு ஓட்டை சைக்கிளில் தான் ஊரைச்சுற்றி வந்தார். அதனை பழுதுபார்க்கக்கூட அவரிடம் காசு இல்லை என்று அவரை நன்கு தெரிந்தவர்கள் கூறினர். இவரது பெயரில் 200 நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் அவர் ஏராளமான ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்த உள்ளது.
சொத்துப் பரிமாற்ற ஆவணங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து ராம்தேவிடம் கேட்ட போது எனக்கு உலகம் முழுவதும் சீடர்கள் உள்ளனர். அவர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்துத்தான் ஒவ்வொரு நிறுவனமாக உருவாக்கி வருகிறேன். நான் எந்த முறைகேடும் செய்யவில்லை. மத்திய அரசு விசாரணை அமைப்புக்கள் எனது ஆசிரமத்தில் சோதனை போட்டு உண்மையை அறிந்துகொள்ளலாம் என்றார் அவர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்