தயாரிப்பாளர் கண்ணப்பன் மகள் திருமணம்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      சினிமா
raj3

 

சென்னை, பிப்.26 - பிரபல படத்தயாரிப்பாளர் பி.கண்ணப்பன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரையுலகினர் வாழ்த்தினார்கள். பாஸ்மார்க், உளவாளி, புருஷன் பொண்டாட்டி, தாலிகாத்த காளியம்மன் ஆகிய படங்களை தயாரித்தவர் பி.கண்ணப்பன். இவரது மகள் டாக்டர் ரேவதிக்கும், விழுப்புரத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகன் ஆர்.கண்ணன் மகன் டாக்டர் கே.பாலமுகுந்தனுக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. நேற்று மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கங்கை அமரனின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மணமகள், மணமகன் பெற்றோர் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் ராம நாராயணன் செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளீதரன், பொருளாளர் காஜாமைதீன், துணைத்தலைவர் அன்பாலயா கே.பிரபாகரன், திரையங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமிராமநாதன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி, வினியோகஸ்தர்கள், சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், எஸ்.தாணு, விக்ரம், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஆர்.பி.செளத்ரி, ஏ.எல்.அழகப்பன், ஹெச்.முரளி, மோகன் நடராஜன், விஜயமுரளி, நடிகர்கள் சத்தியராஜ், பாண்டியராஜன், இசையமைப்பாளர் சிற்பி, ரமேஷ்கண்ணா, தமிழக கல்வி அமைச்சர் க.அன்பழகன், தமிழ்நாடு பேரவை  தலைவர் தேவநாதன், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ, சிவாஜி மற்றும் ஏராளமான வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: