முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ்வை எதிர்த்து காங்., போராட்டம்: சோனியாகாந்தி

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்.- 7 - ஊழல், கறுப்புப்பணம் இவற்றிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்தேவ்வை எதிர்த்து சோனியாகாந்தி போராட்டம் நடத்த காஙகிரசாரை அழைத்துள்ளார். ராம்தேவ்விற்கு பதிலடி கொடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வீட்டில் நேற்றுமுன்தினம் அவசர ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் ராம்தேவ்விற்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட நிறைவில் ராம்தேவ் எப்படிப்பட்டவர். அளவுக்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார். அவரது உதவியாளர்கள் எத்தகைய கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு பின்னணியில் இருந்து உதவி செய்தவர்கள் யார்?யார்.. என்பன குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துச்சொல்லுங்கள் என்று கட்சியினருக்கு உத்தரவிட்டார். தேவைப்பட்டால் ராம்தேவை எதிர்த்து போராட்டம் நடத்தவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி நிருபர்களிடம் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, ராம்தேவ் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்பதை நாங்கள் விரைவில் நிரூபிப்போம். மக்களிடம் செல்வாக்கு பெற இயலாத சில கட்சிகளும் மதவாத சக்திகளும் ராம்தேவை முன்னிறுத்தி ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்க முயல்கின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒற்றுமையாக இருந்து இந்த முயற்சியை தடுக்கவேண்டும். நமது சாதனைகளையும் மக்களிடம் விளக்க வேண்டும். சோனியா எங்களுடன் தனிப்பட்ட நபர்கள் பற்றி விவாதிக்கவில்லை. ராம்தேவ் குறித்து சொல்ல ஒன்றும் இல்லை. அவருக்கு சிலர் பின்னால் நின்று உதவுகின்றனர். எனவே டெல்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை நூற்றுக்கு நூறு சரியான நடவடிக்கை. இவ்வாறு திவேதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்