முக்கிய செய்திகள்

கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை முதல்வர் ஜெயலலிதா பெற்றுதருவார் -கே.வி.ராமலிங்கம் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சேலம் ஜூன்.- 7 - காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடகா அரசிடம் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பெற்று தருவார் என பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நேற்று மேட்டூர் அணையில் நடைபெற்றது.  பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,  நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.மகரnullஷனம், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.செம்மலை, சட்ட மன்ற உறுப்பினர்கள்,அலுவலர்கள்,பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.  பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மேட்டூர் அணையைத் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசியதாவது.  
மேட்டூர் அணையானது 1925 முதல் 1934 ​ ம் ஆண்டு வரை கட்டப்பட்டு,1934​ம் ஆண்டு
ஜுன் 12​ ம் தேதியில் முதன்முறையாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.அன்று முதல் அணையின் தண்ணீர் இருப்பினைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்கு ஜுன் 12​ம் தேதி தண்ணீர் திறந்து விடுவது என்பது அரசின் விதிமுறையாகும்.
 தமிழக முதல்வர் டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜுன் 6​ம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். கடந்த ஆண்டில் நவம்பர் 2010க்குப் பிறகு டெல்டாப் பகுதிகளில் பெய்த மழையினாலும், பவானி மற்றும் அமராவதி ஆறுகளில் மழையினால் கிடைத்த தண்ணீரினாலும்,டெல்டா பாசனப் பயிர்களுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவு தேவைக்கேற்ப வழங்கி சேமிக்கப்பட்டது. இதனால் அணையின் தண்ணீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு மேலாகவே இருந்து வருகிறது.இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்த மழையினால்  தற்போது  அணையின் தண்ணீர்மட்டம் 116 அடியாக உள்ளது. தற்போது தொடர்ந்து 100 அடிக்கு மேலாகவே இருந்து வருகிறது.இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெய்த மழையினால் அளவு தேவைக்கேற்ப வழங்கி சேமிக்கப்பட்டது. இதனால் அணையின் தண்ணீர்மட்டம் டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 6000 கன அடி முதல் படிப்படியாக உயர்த்தப்பட்டு 12,000 கன அடி வரை வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா பாசனப்பகுதியில்திருச்சி,அரியலூர்,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3,09,368 ஏக்கரில் குறுவைச் சாகுபடி செய்யப்படும். சம்பா,தாலடி சாகுபடியும் சேர்த்து மொத்தம் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வரும் 9 ஆம் தேதி கல்லணையை  சென்றடையும். தற்போது உள்ள அணையின் தண்ணீர் இருப்பைக் கொண்டு டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து 90 நாட்களுக்கு தண்ணீர் வழங்க இயலும். வரும் காலங்களில் தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை கர்நாடகாவிடம்  புரட்சித்தலைவி அம்மா பெற்றுத் தருவார் என்று கூறினார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது.
 மேட்டூர் அணையில் உள்ள 16 கண் பாலத்தில் ஆய்வுப் பணி மேற்க்கொள்ளப்டுவதால், இப்பகுதி வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வழியில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தலைமைப் பொறியாளர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு காலையிலும்,மாலையிலும் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற   உறுப்பினர்கள்,மேட்டூர் .எஸ்.ஆர்.பார்த்திபன்,ஓமலூர்  சி.கிருஷ்ணன்,சேலம் வடக்கு.ஆர்.மோகன்ராஜ்,பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் .கணேசமாரச்சன்,செயற்பொறியாளர் எஸ்.சந்திரசேகரன்,உதவி செயற்பொறியாளர் .எஸ்.குமாரசாமி,உதவி பொறியாளர் கே.முருகேசன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: