முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி வக்கீல்கள் மறியல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூன்- .7 - சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி மதுரை மாவட்ட கோர்ட் முன்பு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்த 10 வக்கீல்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.  சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு நிறுத்தி வைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.  இதைக் கண்டித்தும், சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தக் கோரியும், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரை செய்ததற்கு மேல் கூடுதலாக கல்விக்கட்டணம் பள்ளி நிர்வாகிகளை கைது செய்யவலியுறுத்தியும், கட்டாய இலவச கல்வி திட்டம் கடந்த 2009 -ன் படி ஏழைக்குழந்தைகளுக்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துக்கோரியும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட கிளை சார்பில் மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கோர்ட் முன்பாக நடந்த போராட்டத்திற்கு உரிமை பாதுகாப்பு கிளைத்தலைவர் நல்லகாமன் தலைமை வகித்தார். வக்கீல்கள் சங்க செயலாளர் ராமசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்தார். மனிதஉரிமை பாதுகாப்பு செயலாளர் அந்தோணிசாமி, துணைச்செயலாளர் வாஞ்சிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நேரில் வந்தத உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 வக்கீல்கள் உட்பட 60 பேரை கைது செய்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்