2.5 லட்சம் மதிப்புள்ள போலி பிராந்தி பாட்டில்கள் பறிமுதல்

tpk (2)

 

திருப்பரங்குன்றம்,பிப்.26 - மதுரை அவனியாபுரம் அருகே பெருங்குடியில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள போலி பிராந்தி பாட்டில்களும், கடத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு அவனியாபுரம் அருகே உள்ள பெருங்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவலில், அவனியாபுரம் பகுதியில் உள்ள ரிங் ரோட்டில் டி.என். டபிள்யூ. 2588 என்ற எண்ணுள்ள வெள்ளை நிற அம்பாசிடர் காரில் போலி மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாகவும் அந்த காரை மடக்கி பிடிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. 

பயிற்சி டி.எஸ்.பி. வனிதா. எஸ்.ஐ. மனோகரன், முத்து கிருஷ்ணன் ஆகியோர் அந்த காரை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர். போலீஸ் வருவதை அறிந்த காரின் டிரைவர் மின்னல் வேகத்தில் பறந்தார். போலீசார் தொடர்ந்து விரட்டி சென்றனர். பெருங்குடி அருகே சமத்துவபுரம் - குதிரைகுத்தி இடையே அந்த கார் சென்ற போது காரில் இருந்தவர்கள் போலீசார் தொடர்ந்து வருவதை கண்டு ரோட்டின் இடதுபுறம் உள்ள காட்டுப் பகுதிக்குள் காரை செலுத்தினர். நேற்று முன்தினம் அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் தரை முழுவதும் சேறும், சகதியுமாக இருந்தது. அதில் காரின் சக்கரம் சிக்கிக் கொண்டது. 

காரினுள் இருந்தவர்கள் போலீஸ் வருவதை கண்டு காரின் என்ஜினை நிறுத்தி விட்டு சாவியை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டனர். போலீசார் அந்த காரை சோதனையிட்ட போது காருக்குள் 16 மூடைகளில்  பிளாஸ்டிக் பாட்டில்களில் போலி பிராந்தி இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த பாட்டில்களையும் காரையும் போலீசில் ஒரு பிரிவினர் பெருங்குடி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு வந்தனர். காரினுள் கிரீன் மேஜிக் மற்றும் மேஜிக் என்ற லேபிள் ஒட்டிய பாண்டிச்சேரி போலி பிராந்தி பாட்டில்கள் 770 இருந்தது. 

பாட்டில்களின் மூடிகளில் ஒரிஜனல் சரக்குகளுக்கு பயன்படுத்தப்படும் ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள்(போலியானவை) ஒட்டப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 2.5 லட்சமாகும். போலி சரக்குகளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களில் திருமங்கலம் கிழவனேரி பகுதியை சேர்ந்த முத்துவீரணனை(32) போலீசார் நேற்று காலை கப்பலூர் பகுதியில் கைது செய்தனர். மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 27.10.2021 இந்த காளை வந்தாலே களம் பதறும், ஜல்லிக்கட்டு காளை கருப்பு | |Kaalai Valarpu Interview | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021
காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...! பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...!
ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்