முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிராக ராம்தேவ் 4-வது நாளாக உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

ஹரித்வார்,மே.8 - ஊழலுக்கு எதிராக தொடர்ந்து நேற்று 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் பாபா ராம்தேவுக்கு ஆதரவாக மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. அவர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு மக்கள் கூட்டம் சாரை சாரையாக செல்லத்தொடங்கியுள்ளது. நாட்டில் ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தை ஒழிக்க பிரபல சமூக சேவகர் பாபா ராம்தேவ்,டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் சாகும்வரை உண்ணாவிரத்தை தொடங்கினார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். திடீரென்று கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ராம்லீலா மைதானத்திற்குள் போலீசார் புகுந்து ராம்தேவ் உள்பட அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதற்கு சுப்ரீம்கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பியுள்ளது. ராம்லீலா மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ராம்தேவ் ஹரீத்வாரில் உள்ள பதஞ்சலி யோகாபீடத்தில் தொடர்ந்து நேற்று 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் திரண்டு உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர். பாபா ராம்தேவுக்கு பலதரப்பட்ட வகுப்பினரும் மதத்தினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பதஞ்சலி யோகா பீடத்திற்கு உண்ணாவிரதம் இருக்க சென்று கொண்டிருக்கிறார்கள். பாபா ராம்தேவுக்கு ஆதரவு கொடுப்பதற்காக நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க நாங்கள் விரும்புகிறோம் என்று முஸ்லீம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பாளர் டாக்டர். சாதிக் அலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ராம்தேவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் சாதிக் அலி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago