முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உமாபாரதி நேற்று மீண்டும் பா.ஜ.வில் சேர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.- 8 - மத்தியப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சிறந்த பேச்சாளருமான உமாபாரதி நேற்று மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் சacட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையாக பாரதிய ஜனதாவில் உமாபாரதி சேர்க்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் முன்னணி தலைவர்களில் ஒருவராக உமாபாரதி விளங்கினார். மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் இருந்தார். பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவை எல்.கே.அத்வானி புகழ்ந்து பேசியதற்கு கடும் எதிர்ப்பை உமாபாரதி தெரிவித்தார். இதனையொட்டி கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரதிய ஜனதாவில் இருந்து உமாபாரதி நீக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த உமாபாரதி ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் அவரது கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லாததால் மீண்டும் பாரதிய ஜனதாவில் சேர முடிவு செய்தார். மேலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உமாபாரதிக்கு ஓரளவு ஆதரவு இருக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள பாரதிய ஜனதா முடிவு செய்து அவரை பாரதிய ஜனதா மீண்டும் இழுத்துக்கொண்டது.

புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதீன் கட்காரி முன்னிலையில் உமாபாரதி இணைத்துக்கொள்ளப்பட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதீன்கட்காரி,உத்திரப்பிரதேச மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு உமாபாரதி பணியாற்றுவார். மாநிலம் முழுவதும் அவர் பிரசாரம் செய்து கட்சிக்கு ஆதரவை திரட்டும் பணியில் முக்கியமாக ஈடுபடுவார் என்றார். பாரதிய ஜனதாவில் ஒருமித்த கருத்துடன் உமாபாரதி சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று நிதீன்கட்காரி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்